Tuesday, September 15, 2015

ரஜினி பிறந்த நாளில் எந்திரன் 2 ஆரம்பம்?

ரஜினியின் கபாலி படத்தின் துவக்க விழா, ஷூட்டிங் பற்றிய செய்கள் ஒரு பக்கம் பரபரப்பாக மீடியாவில் வலம் வந்துகொண்டிருக்க, மறுபக்கம் அவரது அடுத்த பிரமாண்ட படமான எந்திரன் 2 பற்றிய செய்திகளும் யூகங்களும் பஞ்சமின்றி வந்து கொண்டுள்ளன. 
 
 Enthiran 2 launch on Dec 12
 
இந்தப் படத்தின் முன் தயாரிப்பு வேலைகளை மிகக் கச்சிதமாக செய்து வரும் ஷங்கர், படப்பிடிப்பு வரும் டிசம்பர் 12-ம் தேதி ரஜினி பிறந்த நாளன்று ஆரம்பித்துவிடலாம் என ஆசைப்படுகிறாராம். Enthiran 2 launch on Dec 12 இந்தப் படத்தில் தீபிகா படுகோன் ரஜினிக்கு நாயகியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. ரஜினிக்கு வில்லனாக நடிக்க வைக்க ஹாலிவுட் மெகா ஸ்டார் அர்னால்டுடன் தொடர்ந்து பேசி வருவதாகத் தெரிகிறது. அவர் கேட்கும் பெரும் சம்பளம்தான் பிரச்சினை என்கிறார்கள். இந்த டிசம்பரில் தொடங்கி, அடுத்த டிசம்பர் அல்லது பொங்கலுக்கு படத்தை வெளியிட்டுவிட வேண்டும் என்பதில் ஷங்கரும் உறுதியாக உள்ளாராம்.