விஜய் நடித்துள்ள புலி படம் இன்று தணிக்கைக் குழுவுக்கு
அனுப்பப்பட்டுள்ளது. படத்தை வரும் அக்டோபர் முதல் தேதி வெளியிடுவதில்
உறுதியாக உள்ளனர் தயாரிப்பாளர்கள்.
Paayum Puli (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!
ஏற்கெனவே வெளியாகியுள்ள இப்படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள், ப்ரோமோ
பாடல் ஆகியவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
Puli goes to censor
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹான், ஹன்சிகா, நான் ஈ சுதீப்,
ஸ்ரீதேவி, பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். நட்டி நடராஜ் ஒளிப்பதிவு அமைத்துள்ளார்.
எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் பி.டி.செல்வகுமார், சிபு தமீன்ஸ்
இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இந்தப் படம் இன்று தணிக்கைக் குழு அதிகாரிகளுக்கு திரையிட்டுக்
காண்பிக்கப்படுகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும்படியான
ஒரு கதை என்பதால் எந்த சிக்கலுமின்றி யு சான்று கிடைக்கும் என்று
எதிர்ப்பார்க்கப்படுகிறது.